தீட்சை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
உலகத்தையும் உலகத்து உயிர்களையும் காத்து ரச்சிப்பவன் எம்பெருமான் ஸ்ரீ நாராயண மூர்த்தி அவனது திவ்விய மங்கள நாமமான நாராயணா என்ற திருப்பெயர் சகலவிதமான சங்கடங்களை அகற்றி இன்பத்தை தரவல்லது
அந்த திருநாமத்தின் அகப்புரமாக மறைந்திருக்கும் மந்திர பீஜங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி மனிதர்களின் ஆற்றல்களை வளர்க்க வல்லது அதில் யாருக்கு எந்த மந்திர பீஜம் ஆற்றலை அளிக்கும் என்பதை ஆழ்ந்து அறிந்து பகுத்து தருவதே ஸ்ரீ நாராயண தீட்சை அடிப்படை தத்துவமாகும்.
🔴 நாராயணர் எப்படி உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானவனோ அதே போன்றே அவனது பீஜ மந்திரங்களும் பொதுவானதாகும் ஆண் பெண் பேதமின்றி ஜாதி மத வித்தியாசமின்றி வயது வரம்பு கூட தடையின்றி மனிதனாக பிறந்த அனைவரும் அம்மந்திரங்களை ஜெபிக்கலாம்
ஸ்ரீ நாராயண தீட்சை பயன்கள்
☀ உடல் ஆரோக்கியம்
☀ குடும்பத்தில் சந்தோசம்
☀ ஆன்மீகத்தில் முன்னேற்றம்
☀ மன நிம்மதி ஏற்படுத்தும்
☀ தெய்வீக ஆற்றல் பெருகும்
இந்த தீட்சையில் பெறக்கூடிய நாராயண மந்திரம் பொதுவானது கிடையாது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்