ஸ்ரீ நாராயணா தீட்சை





  லகத்தையும் உலகத்து உயிர்களையும் காத்து ரச்சிப்பவன் எம்பெருமான் ஸ்ரீ நாராயண மூர்த்தி அவனது திவ்விய மங்கள நாமமான நாராயணா என்ற திருப்பெயர் சகலவிதமான சங்கடங்களை அகற்றி இன்பத்தை தரவல்லது 
  
  அந்த திருநாமத்தின் அகப்புரமாக மறைந்திருக்கும் மந்திர பீஜங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி மனிதர்களின் ஆற்றல்களை வளர்க்க வல்லது அதில் யாருக்கு எந்த மந்திர பீஜம் ஆற்றலை அளிக்கும் என்பதை ஆழ்ந்து அறிந்து பகுத்து தருவதே ஸ்ரீ நாராயண தீட்சை அடிப்படை தத்துவமாகும். 
  
🔴 நாராயணர் எப்படி உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானவனோ அதே போன்றே அவனது பீஜ மந்திரங்களும் பொதுவானதாகும் ஆண் பெண் பேதமின்றி ஜாதி மத வித்தியாசமின்றி வயது வரம்பு கூட தடையின்றி மனிதனாக பிறந்த அனைவரும் அம்மந்திரங்களை ஜெபிக்கலாம் 



🔴மனித சரீரத்தில் சத்வ பாகம் என்ற மார்பு பகுதியில் அதாவது அனஹத சக்கரத்தில் இறைவன் நாராயணன் தனது முழு ஆற்றலை செலுத்தி அருள்பாலிக்கிறான் எனவே நாராயண பீஜ மந்திரங்களை அப்பகுதியில் நிலைநிறுத்தி ஜெபம் செய்வதே சாலசிறந்தது ஆகும். அதுவே சிறந்த பலனையும் உடனடியாக தரும். 
  
🔴 உங்களுக்கு தரபட்டிருக்கும் நாராயண பீஜ மந்திரம் உங்களுக்கு மட்டுமே சொந்தமானது அதை பிறரிடம் சொல்வதோ அவர்களை உச்சரிக்க வைப்பதோ மிக கடுமையான பின்விளைவுகளை தந்துவிடும் எனவே இம்மந்திரத்தை பரமரகசியமாக யாரும் அறியாத வண்ணம் உபயோக படுத்த வேண்டும் இந்த விதியை மீறினால் கடும்விளைவுகள் எற்படும் என்று மீண்டும் மீண்டும் எச்சரிக்கின்றோம். 

🔴 ஸ்ரீ நாராயண பீஜ மந்திரத்தை நீங்கள் ஜெபம் செய்யும் போது கிடைக்கின்ற பயன் இரட்டிப்பாக மாறவேண்டும் என்றால் உங்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் என்று பலருக்கும் இந்த தீட்சையின் மகிமையை பற்றி கூறி அவர்களையும் தீட்சை எடுத்து கொள்ள தூண்டுதல் செய்யுங்கள் அப்படி செய்யும் போது அவர்கள் அவர்களுக்கான மந்திரத்தை ஜெபம் செய்யும் போது முக்கால் பங்கு பலன் அவர்களது சொந்த பயன்பாட்டிற்கும் கால்பங்கு உங்களுக்கான புண்ணிய கணக்கில் சேர்ந்து மிக அதிகமான பாலபலனையும் உடனடியாக நீங்கள் பெறுவதற்கு துணை செய்யும். 

🔴  இன்றைய கற்கால உலகில் அறிய இந்த மந்திர கலையை மக்கள் அனைவருக்கும் உபதேசம் செய்யும் தகுதியையும் இறைவனின் அனுமதியையும் பெற்றவர் குருஜியே ஆவார் இந்த மந்திர ஜெபம் செய்யும் நேரத்தில் குருஜியின் திருவுருவ படத்தை உங்கள் முன்னாள் வைத்து ஜெபம் செய்தலோ அல்லது அவரது உருவத்தை உங்கள் மனக்கண் முன்னில் தியானம் செய்தாலோ குருஜியின் தவ ஆற்றல் உங்களில் மற்ற பிரச்சனைகளையும் தீர்க்கும். அத்தோடு அபாய காலங்களில் நீங்கள் எங்கே இருந்து குருஜியை மானசீகமாக பிரார்த்தனை செய்து அழைத்தாலும் அங்கேயே அவர் பிரசன்னமாகி தனது தவவழிமையல் உங்கள் குறைகள் எதுவாக இருந்தாலும் தீர்த்து வைப்பார். இது பலரும் தங்களது சொந்த வாழ்க்கையில் அனுபவித்து வரும் நிதர்சன அனுபவங்களாகும். 

🔴  இந்த தீட்சை எடுப்பவர்கள் மிக முக்கியமாக மூன்று கடமைகளை செய்தாக வேண்டும் ஒன்று வருடத்தில் இரண்டு முறையாவது திருமலைக்கு சென்று அங்கே ஏதாவது ஒரு புண்ணிய இடத்தில் அமர்ந்து இந்த மந்திர ஜெபம் செய்ய வேண்டும் இரண்டாவது மாதத்தில் அமாவாசை அல்லது பெளர்ணமி அன்று ஏழை ஒருவனுக்கு ஒருவேளை உணவாவது வழங்க வேண்டும். மாதம் தோறும் முடியவில்லை என்றால் மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது ஏழைகளுக்கு உணவு வழங்க வேண்டும் மூன்றாவது வருடத்தில் ஒருமுறையாவது நமது குருஜி ஆசிரமத்திற்கு வருகை தந்து அங்கே பிரதிஷ்டை செய்யபட்டிருக்கும் விராட்புருஷனின் வடிவமான ஸ்ரீமன் கிருஷ்ண பகவானையும், சூரிய நாராயணர் லிங்கத்தையும் வழிபட்டு உங்களால் இயன்ற காணிக்கையை செலுத்த வேண்டும். இது உங்களின் கன்மவினையின் தாக்கத்தை குறைக்க உதவி செய்யும். 


🔴   ஸ்ரீ நாராயண பீஜ மந்திரத்தை ஜெபம் செய்யும் போது பத்மாசனத்தில் அமர்ந்து வலது கை நான்கு விரலை மூடி கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்து நம் மார்போடு கை இறுக்கமாக ஒட்டி இருக்க செய்து தியானம் செய்ய வேண்டும் மேலும் மந்திரத்தை உதடுகள் அசையாமல் நாக்கு உச்சரிக்காமல் மனது மட்டுமே சொல்ல வேண்டும் என்பதனால் உங்களது நாக்கை வாய்க்குள் மேல்புறமாக மடித்து ஓட்ட வைத்து கொள்ளுங்கள் அப்போது மந்திரத்தை நீங்கள் சுலபமாக மனதிற்குள் சொல்ல முடியும் உங்கள் மனதும் உடனடியாக ஒருநிலை பட்டுவிடும்.  மேலும் தினசரி காலை அல்லது மாலை சூரியனை கண்கள் இமைக்காமல் மூன்று நிமிட நேரம் கூர்ந்து பார்த்து இம் மந்திரத்தை ஜெபம் செய்ய வேண்டும் அப்படி செய்யும் பட்சத்தில் சூரியனின் மின்காந்த ஆற்றல் உங்களுக்குள் நிரம்பி சகலவிதமான ரோகங்களை களைந்து திடகாத்திரமான உடலையும் மனதையும் நீங்கள் பெறலாம். இத்தோடு இம் மந்திரத்தை காலை மாலை மட்டும் தான் ஜெபம் செய்ய வேண்டும் என்பது இல்லை நீங்கள் எப்போதெல்லாம் ஓய்வாக இருக்கிறீர்களோ அப்போதெல்லாம் எண்ணிக்கை இல்லாமல் உங்களால் எவ்வளவு அதிகமாக மனதிற்குள் சொல்ல முடிகிறதோ அவ்வளவு அதிமாக தினசரி சொல்லி வாருங்கள் இதனால் மந்திரத்தின் பலன் உங்களுக்கு பன்மடங்கு அதிமாகும்.

🔴  ஸ்ரீ நாராயண தீட்சை பின்பற்றுபவர்கள் துக்க வீடு செல்லும் சூழல் ஏற்பட்டால் அங்கு கொடுக்கும் உணவை முடிந்த அளவு தவிர்க்கவும், அதே போல் மஞ்சள் நீரில் கலந்து கொள்ளும் போதும் அங்கு கொடுக்கும் உணவை தவிர்க்கவும்.


🔴  ஸ்ரீ நாராயண தீட்சை பின்பற்றும் பெண்கள் தூர நாட்களில் இந்த பயிற்சியை தொடர வேண்டாம் அந்த நாட்களில் மட்டும் நிறுத்தி கொள்ளவும்.


🔴 ஸ்ரீ நாராயண தீட்சை உங்களுக்கு பலவிதமான அனுபவங்கள் ஏற்படும் உதாரணமாக தெய்வீகமான இசை ஒலிகளை கேட்கலாம் நறுமணங்களை சுவாசிக்கலாம் இன்னும் பலவிதமான் அனுபவங்களை நீங்கள் அடையலாம் அந்த அனுபவங்களை வீடியோ காட்சி நீங்கள் பேசி எங்களுக்கு அனுப்பினால் குருஜியிடத்தில் நேரடியாக காண்பிக்க படும். உங்கள் அனுபவத்தை குருஜியோடு பகிர்ந்து கொள்ள இது சிறந்த வாய்ப்பாக உங்களுக்கு அமையும் அத்துடன் மற்றவர்களுக்கும் உங்கள் அனுபவம் பலவிதமான் ஊக்கத்தை கொடுக்கும்.
  
🔴  ஸ்ரீ நாராயண தீட்சை பெறுபவர்களுக்கு குருஜி அவர்களால் உருவேற்றபட்ட நாராயண விக்ரகமும், துளசிமாலையும் வழங்கப்படும் நேரில் ஆசிரமத்திற்கு வரும்போது உங்களால் முடிந்த காணிக்கை கொடுத்து பெற்று கொள்ளவும்








ஓம் நமோ நாராயணா 







Copyright ©  Sri Guruji Ashramam - www.srigurujiashramam.comAll rights reserved.  Contact us